பொழுதுபோக்கு

சத்ரியன் படத்தில் இளம் வயது கேப்டன்; அவர் அஜித் படத்தின் இயக்குனர்: யார்னு நீங்களே பாருங்க!

Published

on

சத்ரியன் படத்தில் இளம் வயது கேப்டன்; அவர் அஜித் படத்தின் இயக்குனர்: யார்னு நீங்களே பாருங்க!

பொதுவாக சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பலர், வளர்ந்து பெரியவர்களாக சிமாவில் ஏதாவது ஒரு துறையில் என்ட்ரி கொடுக்கும்போது அந்த பையான இது அடையாளமே தெரியலையே என்று சொல்வார்கள். அந்த வகையில், விஜயகாந்த் நடிப்பில், வெளியாக சத்ரியன் படத்தில் இளம் வயது விஜயகாந்த் கேரக்டரில் நடித்து அசத்திய ஒரு சிறுவன் இன்றைக்கு புகழ்பெற்ற ஒரு இயக்குனராக இருக்கிறார்.தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி முத்திரை பதித்த கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் கடந்த 1990-ம் ஆண்டு வெளியான படம் சத்ரியன். இயக்குனர் மணிரத்னம் கதை எழுத, இயக்குனர் கே.சுபாஷ் இந்த படத்தை இயக்கியிருந்தார். விஜயகாந்துடன் ரேவதி, பானுபிரியா, விஜயகுமார், வி.கே.ராமசாமி, டெல்லி கணேஷ், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விஜயகாந்துக்கு வில்லனாக மலையாள நடிகர் திலகன் சிறப்பாக நடித்திருந்தார்.இந்த படத்தில் அவர் விஜயகாந்தை பார்த்து வரணும் ‘’நீ பழைய பன்னீர்செல்வமா திரும்பி வரணும்’’ என்று சொல்லும் வசனம் இன்றும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது கூட, அவர் பழைய பன்னீர்செல்வமா திரும்பி வரணும் என்ற வசனம் பரவலாக அதிகம் ட்ரெண்ட்டிங் செய்யப்பட்டது. படம் வெளியாகி 35 வருடங்கள் கடந்தாலும், இந்த படம் இன்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடிய ஒரு படமாக நிலைத்திருக்கிறது.இந்த படத்தின் ப்ளாஷ்பேக் காட்சியில் இளம் வயது விஜயகாந்த் கேரக்டரில ஒரு சிறுவன் நடித்திருப்பார். அந்த கேரக்டருக்கு தகுந்த நடிப்பை கொடுத்து பலரின் மனதையும் பாராட்டுக்களையும் பெற்ற அந்த சிறுவனம் வேறு யாரும் இல்லை. அஜித் நடிப்பில் பில்லா படத்தை இயக்கிய இயக்குனர் விஷ்ணுவர்த்தன் தான். தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான பட்டியல் சேகரின் மகனான இவர், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அஞ்சலி படத்தில் நடித்திருந்தார்.அதன்பிறகு சத்ரியன் படத்தில், இளம் வயது விஜயகாந்த் கேரக்டரில் சிறப்பாக நடித்து கவனம் ஈர்த்தார். அதன்பிறகு மணிரத்னம் இயக்கிய இருவர் படத்திலும் நடித்திருந்த விஷ்ணுவர்த்தன், 2003-ம் ஆண்டு வெளியாக குறும்பு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் சுமாரான வெற்றியை பெற்றிருந்தது. அதன்பிறகு, அறிந்தும் அறியாமலும் என்ற படத்தை இயக்கினார். இந்த படம் தான் ஆர்யாவை தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்தது.அடுத்து பட்டியல் படத்தை இயக்கிய விஷ்ணுவர்த்தன் இயக்கிய 4-வது படம் தான் அஜித்தின் பில்லா. இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து, சர்வம், ஆரம்பம், யச்சன் உள்ளிட்ட படங்களை இயக்கிய அவர், 4-வது வருட இடைவெளிக்கு பிறகு தமிழில் சமீபத்தில் வெளியான ஆகாஷ் முரளியின் நேசிப்பாயா என்ற படத்தை இயக்கியருந்தார். இந்த படம் பெரிய அளவில் கவனம் ஈர்க்கவில்லை. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version