இலங்கை
சிறைச்சாலைகளில் நெரிசல் உச்சம்; 33,000ஐ கடந்த கைதிகள் எண்ணிக்கை
சிறைச்சாலைகளில் நெரிசல் உச்சம்; 33,000ஐ கடந்த கைதிகள் எண்ணிக்கை
நாட்டின் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை 17ஆம் திகதி நிலைவரப்படி 33 ஆயிரத்து 95 ஆக அதிகரித்துள்ளதாகச் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வெலிக்கடை சிறைச்சாலையில் மட்டும் 750 பேர் தங்கக்கூடிய இடத்தில் 3,557 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கொழும்பு மகசின் சிறையில் 625 பேர் தங்கக்கூடிய இடத்தில் 2,985 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். விளக்கமறியலில் உள்ளவர்கள் மட்டும் 2,426 கைதிகள். 385 கைதிகள் தங்கக்கூடிய இடத்தில் இவ்வளவு பேர் இருப்பது தீவிர நெரிசலை ஏற்படுத்தியுள்ளது. வெலிக்கட பெண்கள் சிறைச்சாலையிலும் 220 கைதிகள் தங்கக்கூடிய இடத்தில் 561 பெண் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.