சினிமா

சூதாட்ட செயலியின் சிக்கலில் பிரபலங்கள்..!நடிகர்களுக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை…!

Published

on

சூதாட்ட செயலியின் சிக்கலில் பிரபலங்கள்..!நடிகர்களுக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை…!

தமிழ் மற்றும் தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் முன்னிலை நடிகர்களாக வலம்  வருபவர்கள் பிரகாஷ் ராஜ், ராணா தாகுபதி மற்றும் விஜய் தேவரகொண்டா. இவர்கள் மீது தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த மூன்று நடிகர்களுக்கும் அமலாக்கத்துறை (ED) சம்மன் அனுப்பியுள்ளது. இவர்கள் அனைவரும் ஜூலை 30ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக 2016 ஆம் ஆண்டில் வெளிவந்த சில ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கான விளம்பரங்களில் இந்த நடிகர்கள் பங்கேற்றதற்கான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்செயலிகள் சட்டவிரோத பணப்புழக்கத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், பல கோடிக்கணக்கில் பணம் சுழற்சி செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.சட்டவிரோத சூதாட்ட செயலிகள் வழக்கில் ஏற்கனவே பலர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இப்போது பிரபலமான மூன்று திரை நட்சத்திரங்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதால், இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை திரையுலகத்திலும், சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணைக்கு பிறகு மேலும் பல பிரபலங்களின் பெயர்களும் வெளியாகும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version