டி.வி
ஜீ தமிழில் புத்தம் புதிய மெகா தொடர் ‘சின்னஞ்சிறு கிளியே’… ஒளிபரப்பு நேரம் எப்ப தெரியுமா?
ஜீ தமிழில் புத்தம் புதிய மெகா தொடர் ‘சின்னஞ்சிறு கிளியே’… ஒளிபரப்பு நேரம் எப்ப தெரியுமா?
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிய தொடரான ‘சின்னஞ்சிறு கிளியே’ இன்று முதல் ஒளிபரப்பாகிறது.திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு இந்தத் தொடர் ஒளிபரப்பாகும் என்று ஜீ தமிழ் அறிவித்துள்ளது.பெண்களின் தன்னம்பிக்கையும், ஆணாதிக்கத்திற்கு எதிரான பாடங்களையும் மையமாகக் கொண்ட இந்த தொடர், சன் டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘எதிர்நீச்சல்’ தொடரை ஒத்திருக்கையிலும், தனித்துவமான கதைக்களத்துடன் உருவாகியுள்ளது.கதையின் நாயகி, பைக் டாக்ஸி ஓட்டுதல், உணவு டெலிவரி, டியூஷன் போன்ற பல வேலைகளைச் செய்துவந்த ஒரு பெண்.தனது குடும்பத்தை சுயமாக நடத்திக்கொண்டிருக்கும் அவள், ஆணாதிக்கம் நிறைந்த ஒரு வீட்டில் திருமணமாகி செல்கிறார். அங்கு அவள் சந்திக்கும் சவால்கள் மற்றும் தன்னம்பிக்கையுடன் அவற்றை எதிர்கொள்வதுவே கதையின் மையம்.இந்த தொடரில் ஸ்வாதிகா நாயகியாகவும், நரேஷ் நாயகனாகவும் நடிக்கின்றனர். இவர்களுடன் ரெளத்திரம் சையத், மதுமிதா, அபிதா, ஆறுமுக வேலு, காயத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.தனித்துவமான கதைக்களம் மற்றும் சமூகத்தினை சிந்திக்க வைக்கும் உள்ளடக்கம் கொண்ட ‘சின்னஞ்சிறு கிளியே’ தொடருக்கு, ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.