இலங்கை

டிஜிட்டல் அடையாள அட்டைகள் தொடர்பில் வெளியான தகவல்!

Published

on

டிஜிட்டல் அடையாள அட்டைகள் தொடர்பில் வெளியான தகவல்!

மின்னணு தேசிய அடையாள அட்டைகள்  2026 ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்படும் என எதிர்பார்ப்பதாக டிஜிட்டல் பொருளாதாரத் துறை பிரதியமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.

2012 இல் தொடங்கிய இந்த திட்டத்தின் நோக்கம், தேசிய அடையாளப் பதிவு முறையை முழுமையாக டிஜிட்டல் வடிவமாக மாற்றுவதாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

தற்போதுள்ள பிளாஸ்டிக் அடையாள அட்டைகள் சூழலுக்கு கேடு விளைவிப்பதாகவும், அதனால் டிஜிட்டல் அடையாள முறைக்கு மாற வேண்டிய அவசியம் இருப்பதாகவும் பிரதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இத்திட்டம் MOSIP எனப்படும் Modular Open Source Identity Platform மூலமாக இலங்கையின் அடையாளப் பதிவு முறையை தனிப்பயனாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

தற்காலிகமாக வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் அடையாளம் ஒரு பாதுகாப்பான மற்றும் திறமையான அடையாளத் தளத்துக்குத் துணை புரியும் முக்கிய கருவியாக மாறிவருகிறது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version