சினிமா

“நாட்டு நாட்டு” பாடகருக்கு அடித்த ஜாக்பாட்! கோடிக்கணக்கில் குவியும் பரிசு! வைரலான தகவல்கள்

Published

on

“நாட்டு நாட்டு” பாடகருக்கு அடித்த ஜாக்பாட்! கோடிக்கணக்கில் குவியும் பரிசு! வைரலான தகவல்கள்

இந்திய சினிமா வரலாற்றில் ஆஸ்கர் தடயத்தில் முக்கிய பங்காற்றியவர், ‘RRR’ திரைப்படத்தில் ‘நாட்டு நாட்டு’ பாடலை பாடிய ராகுல் சிப்லிகஞ்ச். அவரது சாதனையைப் பாராட்டும் வகையில், தெலுங்கானா மாநில அரசு அவருக்கு ஒரு கோடி ரூபாய் நிதி பரிசாக வழங்குவதாக அறிவித்துள்ளது.இந்த அறிவிப்பு, இசை மற்றும் கலைஞர்களுக்கான பரிசாக மட்டுமல்லாமல், “நாட்டு நாட்டு..” பாடலுக்கு கிடைத்த பெருமையை மாநிலம் முழுக்க கொண்டாடும் அறிகுறியாகவும் பார்க்கப்படுகிறது.2022ஆம் ஆண்டு வெளியான எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கிய ‘RRR’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல், இந்திய சினிமாவின் பெருமையை உலகமே அறிவதற்கான வாய்ப்பாக அமைந்தது. ‘ஆஸ்கர்’ விருதை வென்ற இந்த பாடலை ராகுல் சிப்லிகஞ்ச் பாடினார்.இந்த பாடல், 2023 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது பெற்றது. ராகுல் சிப்லிகஞ்ச் சினிமாவில் பல பிரபல இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியவர். ‘நாட்டு நாட்டு’ பாடலை உலக அரங்கில் பறைசாற்றிய அவரது குரல், இந்திய இசையின் ஒரு சக்தியாக உயர்ந்தது. அவரது பாடல் தான் RRR-க்கு பன்னாட்டு ரசிகர்களிடையே அதிக அங்கீகாரத்தை ஏற்படுத்தியது என்றே கூறலாம்.தெலுங்கானா மாநில முதல்வர் ரேவன் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு, கடந்த தேர்தலில் வாக்குறுதியாக, ராகுல் சிப்லிகஞ்சுக்கு ஒரு கோடி பரிசு வழங்குவதாக கூறியிருந்தது. இப்போது ஆட்சி பொறுப்பேற்றதும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதாக தற்பொழுது கூறியுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version