இலங்கை
பட்டதாரிகளே ஆசிரியர்களாக இருக்கலாம்! பிரதமர் ஹரிணி
பட்டதாரிகளே ஆசிரியர்களாக இருக்கலாம்! பிரதமர் ஹரிணி
அனைத்து ஆசிரியர் களும் பட்டதாரிகளாக இரு க்க வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரி வித்துள்ளார்.
புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பில், தென் மாகாண கல்வி அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்துவதற்கான நிகழ்வில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட் டார்.
அத்துடன் ஆசிரியராக நியமிக்கப்படுபவர்கள் கட்டா யமாக ஆசிரியர் பயிற்சி பெறவேண்டும் எனவும் அனைத்து ஆசிரியர்களும் பட்டதாரிகளாக இருப்பது கட்டாயமாகும் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
மேலும் முன்மொழியப் பட்ட சீர்திருத்தங்களுக்கு ஏற்ப, கல்வி நிர்வாகத்தில் தேவையான மாற்றங்க ளைச் செயற்படுத்த ஒரு கல்வி பேரவையை நிறுவு வதற்குத் தாம் முன்மொழிந் துள்ளதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரி வித்துள்ளார்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை