இந்தியா
புறப்பட்ட இடத்துக்கே மீண்டும் திரும்பிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்!
புறப்பட்ட இடத்துக்கே மீண்டும் திரும்பிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்!
ஹைதராபாத்தில் இருந்து தாய்லாந்துக்குப் புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் புறப்பட்ட இடத்துக்கே திரும்பி வந்துள்ளது.
குறித்த ‘போயிங் 737 மேக்ஸ் 8’ விமானம், சனிக்கிழமை காலை 6.40 மணியளவில் ஹைதராபாத் ராஜீவ் காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது.
தாய்லாந்து நேரப்படி முற்பகல் 11.45 மணிக்கு புக்கெட் நகரில் குறித்த விமானம் தரையிறங்க வேண்டிய நிலையில் விண்னை நோக்கிச் சென்ற விமானம் 16 நிமிடங்கள் பறந்த பின்னர் ஹைதராபாத் விமான நிலையத்திற்கே திரும்பி வந்து அவசரமாகத் தரையிறங்கியது.
இதேவேளை, குறித்த நிலைக்கான காரணத்தை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனமோ அல்லது ஹைதராபாத் விமான நிலையமோ இதுவரை தெரிவிக்கவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது