இலங்கை
போதை ஊசியால் இளைஞன் உயிரிழப்பு; யாழில் சீரழியும் இளம் சமூகம்! தடுப்பது யார்?
போதை ஊசியால் இளைஞன் உயிரிழப்பு; யாழில் சீரழியும் இளம் சமூகம்! தடுப்பது யார்?
யாழில் ஊசி மூலம் போதைப்பொருளை உடலில் செலுத்தி வந்த இளைஞன் ஒருவர் நேற்றுமுன்தினம் (19) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
சம்பவத்தில் 26 வயதான இளைஞனே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞன் கடந்த 5 வருடங்களாக ஊசி மூலம் போதைப்பொருளை உடலில் செலுத்தி வந்தாகவும், நேற்றுமுன்தினம் (19) மயக்கமடைந்த நிலையில் வீட்டில் காணப்பட்டுள்ளார்.
நண்பர்கள் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதுடன் யாழ்ப்பாணம் பொலிஸார் சாட்சிகளை நெறிப்படுத்தினர்.
அதேவேளை யாழ் மாவட்டத்தில் இளையோரிடையே போதை பொருள் பாவனை அதிகரித்துள்ளதுடன் , உயிரிழப்புக்களும் பதிவாகி வருகின்றது.
அதேவேளை யாழில் சமூக சீர்கேடுகளும், வன்முறைகளும் , போதைப்பொருள பாவனையும் இளையோரிடையே அதிகரித்து வருகின்றமை தொடர்பில் சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளன.
மேலும் கல்வியில் முன்னோடியாக திகந்த யாழ்ப்பாணம் மாவட்டம் தற்போது பின்தங்கிய நிலையில் சென்றுள்ளமை அண்மையில் வெளியான கா.பொ.த சாதாரண பரீட்சை முடிவுகள் காண்பித்திருந்தது.
இந்நிலையில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் தொடர்பில் மிகுந்த கவனம் எடுக்க வேண்டுமென கல்விமான்கள் சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.