இலங்கை

மீன்பிடிக்கச் சென்ற இருவர் மாயம் ; ஒருவர் சடலமாக மீட்பு

Published

on

மீன்பிடிக்கச் சென்ற இருவர் மாயம் ; ஒருவர் சடலமாக மீட்பு

   உடவளவை பனஹடுவ ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற இரண்டு பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

இந்த இரண்டு நபர்களும் டியூப் ஒன்றின் உதவியுடன் மீன்பிடிப்பதற்காக பனஹடுவ ஏரிக்கு சென்ற நிலையில் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

Advertisement

சம்பவத்தில் 30 மற்றும் 29 வயதுடைய இரண்டு இளைஞர்களே காணாமல் போயுள்ளனர்.

குறித்த இருவரும் பனஹடுவ பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

மீன்பிடிக்கச் சென்ற இளைஞர்களும் நீரில் மூழ்குவதைக் கண்ட நபர் ஒருவர் இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

Advertisement

இதனையடுத்து எம்பிலிப்பிட்டிய பொலிஸ் நிலைய உயிர் காக்கும் பிரிவு மற்றும் இராணுவத்தின் நீச்சல் வீரர்கள் வந்து இருவரையும் தேடும் பணியை ஆரம்பித்த நிலையில், ஒருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் காணாமல் போன மற்றொருவரின் உடலைக் கண்டுபிடிக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version