சினிமா

மு.க.ஸ்டாலினுக்கு என்ன நடந்த.? பதறி அடிச்சு நலம் விசாரித்த பிரபல நடிகர்..!

Published

on

மு.க.ஸ்டாலினுக்கு என்ன நடந்த.? பதறி அடிச்சு நலம் விசாரித்த பிரபல நடிகர்..!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம், மாநில மக்கள் மட்டுமல்லாமல், அரசியல், சினிமா உள்ளிட்ட அனைத்து துறைகளையும் கலங்க வைத்தது. திடீரென நடை பயிற்சி சென்றபோது அவருக்கு ஏற்பட்ட லேசான தலைசுற்றல் காரணமாகவே, அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்து செல்லப்பட்டார்.இதனையடுத்து, அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் என அனைவரும் முதலமைச்சரின் உடல்நிலை குறித்து கவலை வெளியிட்டு வருகின்றனர். அவர் விரைவில் நலமாகி வரவேண்டும் எனப் பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.அந்த வரிசையில், தமிழக மக்களின் பெருமதிப்பைப் பெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்துள்ளார் என்பது தற்போது வெளியாகிய முக்கியமான தகவல்.முதலமைச்சர் ஸ்டாலினை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட நடிகர் ரஜினிகாந்த், அவரது உடல்நிலை குறித்து நேரில் கேட்டறிந்ததாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version