இலங்கை

யாழில் பயங்கரம்; சந்தேகத்தால் மனைவியை எரித்த கணவன்

Published

on

யாழில் பயங்கரம்; சந்தேகத்தால் மனைவியை எரித்த கணவன்

  யாழ்ப்பாணம், வடமராட்சியில் கணவனால் தீமூட்டி எரிக்கப்பட்ட குடும்பப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வடமராட்சி துன்னாலை பிரதேசத்த சேர்த பெண்ணே உயிரிழந்துள்ளார்.

Advertisement

கடந்த 17ஆம் திகதி 38 வயதான குடும்பப் பெண்ணொருவர் தீயில் எரிந்த நிலையில், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் ஆபத்தான நிலையில் இருந்ததால் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

பெண் பொலிசாரிடம் வழங்கிய வாக்குமூலத்தில், தனது கணவர் தன்னை எரித்ததாக தெரிவித்திருந்தார்.

Advertisement

கசிப்பு குடித்து விட்டு வந்த கணவன், வேறொரு ஆணுடன் அந்த பெண்ணுக்கு தொடர்பிருப்பதாக குறிப்பிட்டு, தகராறில் ஈடுபட்ட பின்னர், அந்த பெண்ணை தீமூட்டி எரித்துள்ளார்.

யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்றி இன்று (21) உயிரிழந்த நிலையில் கணவர் நெல்லியடி பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version