இலங்கை
யாழ்ப்பாணம் கசூரினா கடற்கரையில் பாரிய தீ
யாழ்ப்பாணம் கசூரினா கடற்கரையில் பாரிய தீ
யாழ்ப்பாணம் கசூரினா கடற்கரையில் நேற்றைய தினம் (20) இரவு பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பிரதேச மக்கள் பொலிஸாருக்கும், கடற்படையினருக்கும் தகவல் வழங்கியதை அடுத்து அங்கு சென்ற பொலிஸாரும், கடற்படையினரும், பிரதேச சபையினரும் பவுசர்கள் மூலம் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தீ பரவியதையறிந்து கடற்கரைக்கு விரைந்த பிரதேச சபையினர், கடற்படையினர் ஆகியோர் நீண்ட போராட்டத்தின் பின் தீயினை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
மேலும், கடற்கரையில் காணப்பட்ட சவுக்கு மரங்கள், பனை மரங்கள் என்பன தீயில் கருகி நாசமாகியுள்ளன.
தீ விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை யாழ்ப்பாணத்தின் பிரபல சுற்றுலா தளங்களில் ஒன்றாக கசூரினா கடற்கரை உள்லமை குறிப்பிடத்தக்கது.