இலங்கை
வீட்டாரை மிரட்டியவரின் விளையாட்டு விபரீதமானது; உடலில் தீப்பற்றி மரணம்
வீட்டாரை மிரட்டியவரின் விளையாட்டு விபரீதமானது; உடலில் தீப்பற்றி மரணம்
வீட்டிலிருந்தோரை மிரட்டுவதற்காக மது போதையில் தன்மீது பெற்றோல் ஊற்றியவர், உடலில் தீப்பற்றியதால் உயிரிழந்துள்ளார். நயினாதீவைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்தச்சம்பவம் கடந்த 17ஆம் திகதி நடந்துள்ளது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த இவர் நேற்று உயிரிழந்துள்ளார். இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார்.