இலங்கை
2025இல் அதிகரித்த அரச வருமானம்!
2025இல் அதிகரித்த அரச வருமானம்!
2025 ஜனவரி முதல் மே வரையிலான 5 மாத காலப்பகுதியில் அரசாங்கத்தின் வருமானம் 1,942.36 பில்லியன் ரூபா என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இது 2024 ஆம் ஆண்டின் முதல் 5 மாதங்களில் அரசாங்கத்தின் 1,619.23 பில்லியன் ரூபா வருமானத்துடன் ஒப்பிடும்போது இது 19.95 வீதம் அதிகமாகும்.
குறித்த காலப்பகுதியில் அரசாங்க வரி வருமானம் 1,491.25 பில்லியன் ரூபாவில் இருந்து 1,802.48 பில்லியன் ரூபா வரையில் 20.87 வீதம் அதிகரித்ததே இதற்கான முக்கிய காரணமாகும்.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள வாராந்த அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.