இலங்கை

இன்று கஜகேசரி ராஜயோகம்; அதிஷ்ட மழையில் நனையவுள்ள ராசிகாரர்கள் யார் தெரியுமா?

Published

on

இன்று கஜகேசரி ராஜயோகம்; அதிஷ்ட மழையில் நனையவுள்ள ராசிகாரர்கள் யார் தெரியுமா?

வேத ஜோதிடத்தில் வலிமையான கிரகங்களில் ஒன்றாக கருதப்படும் சந்திரன், அதிவேகமாக தனது ராசியை மாற்றி வருகிறார். அந்த வகையில் ஜூலை 22,  ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு குடியேறுகிறார்.

தொடர்ந்து இரண்டு நாள்களுக்கு மிதுன ராசியில் பயணிக்கும் சந்திரன், அங்கு ஏற்கனவே குடியிருக்கும் குருவுடன் இணைந்து மங்களகரமான கஜகேசரி யோகத்தை உண்டாக்குகிறார். இதன் தாக்கம், கன்னி உட்பட 3 ராசியினரின் வாழ்க்கையில் மகத்தான மாற்றங்களை கொண்டு வரும் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

Advertisement

மிதுனம்:
மிதுன ராசியில் குருவுடன் இணையும் சந்திரன், மிதுன ராசியினரின் லக்ண வீட்டில் தாக்கத்தை உண்டாக்குகிறார். நிதி நிலையில் ஏற்றம் காண்பதோடு, தொழில் துறையில் வாய்ப்புகளை அதிகரிக்கும், சுய தொழில் செய்யும் நபர்கள் புதிய ஒப்பந்தங்கள், பெரிய ஆர்டர்களை பெறும் வாய்ப்பு காணப்படுகிறது.

குடும்ப வாழ்க்கையை பொறுத்தவரையில் உங்கள் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். தம்பதியரிடையே காதல் அதிகரிக்கும், பரஸ்பர புரிதலும் அதிகரிக்கும். உறவில் காணப்பட்ட மனஸ்தாபங்கள் முடிவுக்கு வரும்.

Advertisement

சிம்மம் : மிதுன ராசியில் உண்டாகும் கஷகேசரி யோகம், சிம்ம ராசியினரின் தன வீட்டில் மாற்றத்தை உண்டாக்குகிறது. இதன் விளைவாக சிம்ம ராசியினர் தங்கள் தொழிலில் எதிர்பாராத வருமானத்தை பெறுவார்கள்.

வணிகம், விற்பனை, சந்தைப்படுத்துதல் துறையில் இருப்பவர்களுக்கு இது சிறப்பான ஒரு காலமாக இருக்கும்

உங்கள் தொழிலை அடுத்தடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான வழிகள் கிடைக்கும்.

Advertisement

அரசு பணிக்காக காத்திருக்கும் நபர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும், திருமணம் முடிக்காதவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும் வாய்ப்பு காணப்படுகிறது.

கன்னி :
மிதுன ராசியில் உண்டாகும் கஜகேசரி யோகம், கன்னி ராசியினரின் ஜாதகத்தில் 10-வது வீட்டில் மாற்றத்தை உண்டாக்குகிறது. தொழில் வாழ்க்கை, வியாபாரம், சமூக அந்தஸ்து, சாதனைகள் மற்றும் லட்சியங்களை குறிக்கும் ஒரு வீடாக இது பார்க்கப்படுகிறது. கஜகேசரி யோகத்தின் தாக்கம் புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகளை கொண்டு வருகிறது, ஏற்கனவே செய்து வரும் தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதன் வாய்ப்புகளையும் அதிகரிக்கிறது.

Advertisement

பணியின்றி காத்திருக்கும் நபர்களுக்கும் நன்மை பயக்கும் ஒரு யோகமாக இது அமைகிறது. கல்வி துறை சார்ந்த பணிகளில் இருக்கும் நபர்களுக்கு இது சிறப்பான ஒரு காலமாக இருக்கும்; மாணவர்களுக்கும் சிறப்பான ஒரு காலமாக இது அமையும்.

உயர் கல்விக்காக போட்டி தேர்வு, திறனாய்வு தேர்வு எழுதி காத்திருக்கும் நபர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். நிதி நிலையை பொறுத்தவரையில், வியாபாரத்தில் போதுமான வருமானம் கிடைக்கும், உங்கள் கடன் பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.

வங்கி சேமிப்புகள் அதிகரிக்கும், உங்கள் குடும்ப வாழ்க்கையிலும் மகிழ்ச்சி உண்டாகும். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version