உலகம்
கல்லூரியொன்றில் வீழ்ந்தது விமானம்; பங்களாதேஷில் பதற்றம்!
கல்லூரியொன்றில் வீழ்ந்தது விமானம்; பங்களாதேஷில் பதற்றம்!
பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில், இராணுவ விமானமொன்று பாடசாலை மீது நேற்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலர் உயிரிழந்துள்ளனர்.
பங்களாதேஷ் விமானப் படைக்குச் சொந்தமான விமானமொன்றே, பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து பாடசாலை ஒன்றின் மீது வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது, விமானத்தில் இருந்தவர்கள் மற்றும் பாடசாலை வளாகத்தில் இருந்தவர்கள் என 22 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்த நிலையில், அவர்கள் டாக்காவில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். கட்டட இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியுள்ள நிலையில், அவர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. காயமடைந்த சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகின்றது. உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று தேசிய துக்கதினம் கடைப்பிடிக்கப்படும் என்று பங்களாதேஷ் அரசாங்கம் அறிவித்துள்ளது. அத்துடன், விமானத்தின் கறுப்புப்பெட்டி பகுப்பாய்வுக்காக உட்படுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.