உலகம்

பதவியை ராஜினாமா செய்த கீதா கோபிநாத்!

Published

on

பதவியை ராஜினாமா செய்த கீதா கோபிநாத்!

சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவப் பணிப்பாளராகப் பணியாற்றி வரும் கீதா கோபிநாத் பதவி விலகல் செய்யவுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா நேற்று (21) இதை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

Advertisement

அவர் 2025 ஆகஸ்ட் மாத இறுதியில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறையில் மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அங்கு அவர் முதல் கிரகரி மற்றும் ஆனியா கோஃபி பொருளாதாரப் பேராசிரியராகப் பதவியேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தியரான கீதா கோபிநாத் இவ்வுலகின் மிகச்சிறந்த பொருளாதார நிபுணர்களில் ஒருவர்.

Advertisement

அட்டகாசமான கல்வியறிவும் அறிவார்ந்த தலைமை பண்பும் கொண்டவர் மேலும் பெரிய அளவில் சர்வதேச அனுபவமும் கொண்டவர் என சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநரான கிறிஸ்ட்டின் லகார்டே பாராட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version