இந்தியா

அடுத்த துணை ஜனாதிபதி யார்? மோடி வெளிநாட்டில் இருந்து வந்ததும் தேர்வு; என்.டி.ஏ கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்பு

Published

on

அடுத்த துணை ஜனாதிபதி யார்? மோடி வெளிநாட்டில் இருந்து வந்ததும் தேர்வு; என்.டி.ஏ கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்பு

பிரதமரின் வெளிநாட்டுப் பயணத்திற்குப் பிறகு தேர்வு செய்யப்படுவார்; தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் (ஜே.டி.(யு)) அல்லது தெலுங்கு தேசம் கட்சி (டி.டி.பி)-க்கு இந்த பதவி வழங்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அரசு மற்றும் கட்சியில் முக்கிய மாற்றங்களுக்கு தயாராகும் நேரத்தில் துணை குடியரசுத் தலைவர் தேர்தல் வருவதாகவும் கூறப்படுகிறது.ஆங்கிலத்தில் படிக்க:புதிய துணை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் புதன்கிழமை தொடங்கியுள்ள நிலையில், ஜெகதீப் தன்கரின் இடத்திற்கு அரசின் தேர்வு, பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணத்திற்குப் பிறகு பா.ஜ.க நாடாளுமன்றக் குழுவால் முடிவு செய்யப்படும்.நாடாளுமன்றக் குழுவின் தலைவரான பிரதமர் நரேந்திர மோடி, புதன்கிழமை நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தைத் தொடங்கியுள்ளதால், அவரது வருகைக்குப் பின்னரே கூட்டம் நடைபெறும்.பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் மக்களவை மற்றும் மாநிலங்களவை பலம் காரணமாக, தேர்ந்தெடுக்கப்படவுள்ள அரசு வேட்பாளர் “முழுமையான விசுவாசம் கொண்டவராக” இருப்பார் என்று உயர்மட்ட பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.ஒரு மூத்த பா.ஜ.க தலைவர் கூறுகையில், “இந்த விவகாரம் குறித்து இறுதி முடிவு கட்சியின் மூத்த தலைவர்களால் எடுக்கப்பட்டாலும், தன்கருக்குப் பதிலாக நீண்டகாலமாக என்.டி.ஏ உறுப்பினராக இருப்பவர் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.” என்று கூறினார்.“தேசிய ஜனநாயக கூட்டணியின் முக்கிய அங்கங்களான தெலுங்கு தேசம் கட்சி (டி.டி.பி) அல்லது ஐக்கிய ஜனதா தளம் (ஜே.டி.(யு)) ஆகியவற்றில் இருந்து ஒருவர் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது” என்று அந்த தலைவர் மேலும் கூறினார். இத்தகைய நடவடிக்கை பா.ஜ.க-வுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும்.துணை குடியரசுத் தலைவர் தேர்தல், மத்திய அமைச்சரவையில் “முக்கிய மாற்றங்கள்” எதிர்பார்க்கப்படும் நேரத்தில் வருகிறது. இது தவிர, ஆளுநர் நியமனங்கள் மற்றும் பா.ஜ.க-வின் அடுத்த தேசிய தலைவருக்கான உட்கட்சி தேர்தல்களும் நடைபெற உள்ளன என்று ஒரு வட்டாரம் சுட்டிக்காட்டியது.பா.ஜ.க வட்டாரங்கள் கூறியபடி, ராஜ்யசபா பதவிக்காலம் முடிவடைய உள்ள பா.ஜ.க எம்.பி.க்கள் மற்றும் இணை அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள் இந்த மாற்றங்களின் ஒரு பகுதியாக இருக்கலாம்.திங்கட்கிழமை ராஜ்யசபாவில் தன்கர் தலைமை தாங்கியபோது நடந்த நிகழ்வுகள், நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிரான எதிர்க்கட்சித் தீர்மானம் தொடர்பானவை என்றாலும், தன்கரின் ராஜினாமா “சில காலமாகவே எதிர்பார்த்தது” என்று வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.இது அவரது உடல்நிலை உட்பட பல காரணங்களால் இருக்கலாம் என்று ஒரு மூத்த பா.ஜ.க தலைவர் தெரிவித்தார்.மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முந்தைய நாள் தன்கரை சந்தித்த ஒரு பா.ஜ.க எம்.பி. கூறுகையில்,  “நிச்சயமாக பல காரணங்கள் உள்ளன, ஆனால் அவரது உடல்நிலை அவரது ராஜினாமா முடிவுக்கு ஒரு காரணம் என்பதில் சந்தேகமில்லை” என்றார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version