சினிமா

கேஸ் போட்ட இளையராஜா!! விசாரணைக்கு பின் கொந்தளித்து பேசிய வனிதா விஜயகுமார்

Published

on

கேஸ் போட்ட இளையராஜா!! விசாரணைக்கு பின் கொந்தளித்து பேசிய வனிதா விஜயகுமார்

நடிகை வனிதா விஜயகுமார், நடித்து இயக்கிய மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தில் ராத்திரி சிவராத்திரி பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியதாக இசைஞானி இளையராஜா வழக்கு பதிவு செய்தார். ஆனால் நாங்கள் இளையாராஜாவை சந்தித்து அனுமதி வாங்கியும் ஆசிவாதம் பெற்றும் தான் படத்தில் அந்த பாடலை பயன்படுத்தினோம் என்றும் இளையராஜா வீட்டு மருமகளாக போகவேண்டியவள் நான் என்றும் வனிதா கூறியிருந்தார்.மேலும் நீதிமன்றத்தில் இளையராஜாவின் பெயரை படத்தில் பயன்படுத்தியதாகவும், தயாரிப்பாளர் வனிதா விஜயகுமார் சார்பில் சோனி மியூசிக் நிறுவனத்திடம் அனுமதி பெற்று தான் அந்த பாடலை பயன்படுத்தியதால் காப்புரிமை மீறல் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டது.இதுகுறித்து வனிதா பதிலளிக்க வேண்டும் என்றும் படம் ரிலீஸாகிவிட்டதால் இனி தடை செய்ய முடியாது. வேண்டுமானால் மனுதாரர் இழப்பீடு பெற்றுக்கொள்ளலாம் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டனர்.வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இளையராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சரவணன், படத்தில் இளையராஜா பெயரை பயன்படுத்தக்கூடாது என்று தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.அப்போது வனிதாவின் வழக்கறிஞர் ஸ்ரீதர், இளையராஜா 4850 பாடலை சோனி மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளதாகவும் அவர்களிடமிருந்து பாடலை வாங்கியதாகவும் தெரிவித்தார்.மேலும் படத்தில் இளையராஜாவின் பெயர் பயன்படுத்தப்பட்டதை நீக்கிவிட்டதாக குறிபிட்டுள்ளார். இதனையடுத்து வழக்க விசாரித்த நீதிபதி இந்த வழக்கில் சோனி மியூசிக் நிறுவனத்தையும் சேர்க்குமாறு உத்திரவிட்டு, அடுத்த மாதம் ஆகஸ்ட் 18 ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்.இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய வனிதா, படத்தில் இளையராஜாவுக்கு நன்றி கூறியிருந்தோம். ஆனால் அதில் அவருக்கு விருப்பம் இல்லை என்பதால் நன்றி கார்டை எடுத்துவிட்டோம்.எனக்கு ஃபோன் செய்து பெயரை ஏன் போட்டிங்கன்னு கேட்டிருக்கலாம். ஆனால் நான் என்னமோ திருடி மாதிரி ட்ரீட் செய்கிறார். வாடகை காரில் தான் இப்போது இங்கு வந்தேன். அந்த டிரைவருக்கு இந்த பிரச்சனை தெரியும் என்பதால் என்னிடம், இளையராஜாவுக்கு வேற வேலையே இல்லையான்னு கேட்டார்.அவர் வழக்கு போட்டது ராஜாவுக்கு மரியாதையை கொடுக்கவில்லை, அவர் என்னிடம் போன் செய்து திட்டியிருக்கலாம், ஆனால் பணம் கேட்கிறார், அவருக்கு கொடுக்கும் அளவிற்கு நான் சம்பாதிக்கவில்லை என்று வனிதா தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version