சினிமா

முழு சம்பளம் இல்லையென்றால் ஷூட்டிங் இல்லை” – ஜாக்லின் டார்ச்சரால் அதிர்ந்த படக்குழு..!

Published

on

முழு சம்பளம் இல்லையென்றால் ஷூட்டிங் இல்லை” – ஜாக்லின் டார்ச்சரால் அதிர்ந்த படக்குழு..!

சிறிய கதாபாத்திரங்களிலிருந்து வளர்ந்து வந்த ஜாக்குலின், இன்று முன்னணி நடிகையாக திகழ்கிறார். ஆனால் அந்த வெற்றிக்குப் பின்னால் எதிர்ப்பாராத பிரச்னைகளும் இருகின்றன. “புரொமோஷனுக்கு வரமாட்டேன்”, “இவ்வளவு சம்பளம் தான் வேண்டும்” என்று பல்வேறு விதமான நிபந்தனைகள் வைத்தும், தயாரிப்பாளர்களை கடுமையாகப் பிணித்தும் வருகிறார் ஜாக்குலின்.அண்மையில் வெளியான கெவி படத்திலும் இவர் அதையே செய்திருக்கிறார். “40 நிமிடம் எனது காட்சி இருக்க வேண்டும், இல்லையெனில் படத்தில் இருக்க முடியாது” என்று இயக்குநரிடம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். படத்தின் கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட வேண்டிய தருணத்தில், “முழு சம்பளத்தை முதலில் வழங்குங்கள், அதற்குப்பிறகே ஷூட்டிங்கிற்கு வருவேன்” என தயாரிப்பாளர் குழுவை அதிரவைத்திருக்கிறார்.விலகிய ஜாக்லின் மீண்டும் “புரொமோஷனில் வரவே மாட்டேன், முழு படத்தையும் காட்டினால் மட்டும் வருவேன்” என புதிய நிபந்தனை விதித்ததாலும் குழுவினர் திணறியுள்ளனர். இப்படித் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வந்தாலும், ஜாக்குலினை தேடி பட வாய்ப்புகள் வருவது தனி விசேஷம்.விஜய் டிவி நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மத்தியில் புகழ் பெற்ற ஜாக்குலின், கோலமாவு கோகிலா போன்ற படங்களில் நடித்த அனுபவமும் பெற்றுள்ளார். ஆனால் தற்போது இவரது ‘பிரம்மாண்டம்’ சிலருக்கு மரியாதையைவிட அதீதமாகவே தோன்றுகிறது. வளர்ந்து வரும் வேளையிலேயே இவ்வளவு தம்பட்டம் என்றால், எதிர்காலத்தில் இப்படியொரு நடிகையுடன் வேலை செய்வது எளிதல்ல என்று கூறுகிறார்கள் திரையுலக வட்டாரங்கள்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version