உலகம்

வெள்ளத்தில் மிதக்கும் தென்கொரியா: பலர் பலி!

Published

on

வெள்ளத்தில் மிதக்கும் தென்கொரியா: பலர் பலி!

தென்கொரியாவில் கடந்த சில நாள்களாகப் பெய்துவரும் கனமழையால் பல பகுதிகளில் வெள்ளம் அலைமோதி பெருக்கெடுத்துள்ளது.

தொடர்ச்சியாக ஏற்பட்ட கனமழையால் தென்கொரியாவின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

Advertisement

இதனால் அப்பகுதிகளில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

தென்கொரியாவின் தெற்கு சுங்க்சோங் மாகாணம், குவாங்ஜூ நகரம் வெள்ளம், நிலச்சரிவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கேப்யோங் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் மற்றும் நிவாரண முகாம்கள் மூழ்கியுள்ளன.

வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரையில் 17 பேர் உயிரிழந்துள்ளதோடு 13 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

கனமழையின் மத்தியில் பயணித்த வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதிலேயே இருவர் உயிரிழந்தனர். 

அத்துடன் தொடரும் கனமழையால் மேலும் பலர் காணாமல் போயுள்ளதால் அந்தப் பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வெள்ளம் சூழ்ந்த பகுதியில் வசிக்கும் 13 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவால் தென்கொரியாவின் பல பகுதிகள் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version