இலங்கை

அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ள ரணில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

Published

on

அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ள ரணில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

2022 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் திகதி அப்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நாடு தழுவிய அவசரகால ஒழுங்குவிதிகளை பிரகடனப்படுத்தியதன் மூலம் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 02 இன் கீழ் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அவசரகால ஒழுங்குவிதிகளை பிரகடனப்படுத்தியமை, தன்னிச்சையானது மற்றும் செல்லுபடியாகாதது என்று உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாமின் பெரும்பான்மையான நீதியரசர்கள் தீர்ப்பளித்தனர்.

Advertisement

பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோ மற்றும் நீதியரசர் யசந்த கோதாகொட ஆகியோர் இந்தத் தீர்ப்பை அறிவித்தனர். இருப்பினும், மூன்று நீதியரசர்களில் ஒருவரான அர்ஜுன ஒபேசேகர தனது தீர்ப்பை வழங்கும்போது, பதில் ஜனாதிபதியின், அவசரகாலச் சட்டப் பிரகடனம் அடிப்படை மனித உரிமைகளை மீறவில்லை என்று அறிவித்துள்ளார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version