இலங்கை

இலங்கையில் கைதான இளம் சீனப்பிரஜை ; அம்பலமான பெரும் மோசடி

Published

on

இலங்கையில் கைதான இளம் சீனப்பிரஜை ; அம்பலமான பெரும் மோசடி

இலங்கைக்கு வருகை தந்திருந்த இணையவழி மோசடியுடன் தொடர்புடைய சீன பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு இன்று  (24) நாடு கடத்தப்பட்டுள்ளார்.

28 வயதுடைய சீன பிரஜை ஒருவரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

Advertisement

இந்த சீன பிரஜை நேற்று  (23) மாலை 05.10 மணியளவில் மலேசியாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது இந்த சீன பிரஜையிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இலங்கையில் உள்ள வர்த்தகர் ஒருவரை சந்திப்பதற்காக வருகை தந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

பின்னர் விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில், இந்த சீன பிரஜை இணையவழி மோசடியுடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது.

Advertisement

இதனையடுத்து இந்த சீன பிரஜை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் இன்று நாடு கடத்தப்பட்டுள்ளார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version