இலங்கை

எதிர்காலத்தில் கற்பித்தலுக்கான அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியான தகவல்!

Published

on

எதிர்காலத்தில் கற்பித்தலுக்கான அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியான தகவல்!

எதிர்வரும் காலங்களில் அரச, தனியார் பாடசாலைகள் மட்டுமன்றி மேலதிக வகுப்பு ஆசிரியர்களுக்கும் கற்பித்தலுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அதன் பின்னர் அரச மற்றும் தனியார் பாடசாலைகள், மேலதிக வகுப்பு நிறுவனங்கள் மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்களில் அனுமதிப்பத்திரம் இல்லாமல் கற்பித்தலில் ஈடுபடுபவர்கள் எதிர்காலத்தில் கைது செய்யப்படுவர் என தொழில் உறவுகள் பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

Advertisement

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, அரச மற்றும் தனியார் பாடசாலைகளில் ஆசிரியராக வேலை செய்வதற்கோ அல்லது தனிப்பட்ட டியூசன் வகுப்புகள் நடத்துவதற்கோ சம்பந்தப்பட்ட கல்வி மற்றும் பயிற்சி தகுதிகளுடன் அதிகாரபூர்வ அனுமதிப்பத்திரம் அவசியம் தேவைப்படுகிறது.

இது இல்லாமல் செயல்படுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

கற்பித்தலுக்குத் தகுதியற்ற பலர் ஆசிரியர்களாக கற்பித்தலில் ஈடுபட்டு மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்குவதாக பல்வேறு தரப்பிலும் இருந்து கிடைக்கப் பெற்ற புகார்களை அடுத்தே இந்தக் கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version