இலங்கை

எரிபொருள் விலை குறைப்பு ; இலங்கையில் உருவாகும் புதிய திட்டம்

Published

on

எரிபொருள் விலை குறைப்பு ; இலங்கையில் உருவாகும் புதிய திட்டம்

எரிபொருள் விலையை மேலும் குறைப்பதற்காக புதிய முறையொன்றை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கவனம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எரிபொருள் விநியோகஸ்தர்களின் பராமரிப்பு செலவுகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement

அதன்படி, எரிபொருள் விநியோகத்துக்கு பயன்படுத்தப்படும் பவுசர்களின் உதிரி பாகங்களின் விலை மற்றும் பிற பராமரிப்பு செலவுகளைக் குறைப்பதன் மூலம் செலவுகளை குறைப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குநர்  தெரிவித்தார்.

இது தொடர்பாக விநியோகஸ்தர்களுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு, செலவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த நடவடிக்கையானது எரிபொருள் விநியோகச் சங்கிலியில் செலவுகளைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதுடன், இதன் பலன்கள் நுகர்வோருக்குக் வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version