இலங்கை

கணவனின் நாக்கை கடித்து விழுங்கிய மனைவி ; இளம் பெண்ணின் வெறிச்செயலால் அதிர்ச்சி

Published

on

கணவனின் நாக்கை கடித்து விழுங்கிய மனைவி ; இளம் பெண்ணின் வெறிச்செயலால் அதிர்ச்சி

பீகார் மாநிலம் கயா அடுத்த கிஜ்ரா சராய் நகரை சேர்ந்த வாலிபர் அவரது மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மீண்டும் தகராறு ஏற்பட்டது. 

அப்போது வாலிபர், மனைவியை சரமாரியாக தாக்கினார். திடீரென ஆவேசமடைந்த அவரது மனைவி, கணவனை அடித்து கீழே தள்ளி பின்னர் கணவனின் நாக்கை கடித்து மென்று விழுங்கினார். 

Advertisement

நாக்கு துண்டானதால் வாலிபர் வலியால் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்த போது மனைவியின் வாய், முகம் மற்றும் உடல் முழுவதும் ரத்தம் சிதறி கிடந்துள்ளது. 

வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதுடன் அவரது உடலில் இருந்து அதிக அளவு ரத்தம் வெளியேறியதால் ஆபத்தான நிலைக்கு சென்றதுடன்  அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. 

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version