இலங்கை

கிளிநொச்சியில் சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரிப்பு: மக்கள் உதவியை நாடும் காவல்துறை!

Published

on

கிளிநொச்சியில் சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரிப்பு: மக்கள் உதவியை நாடும் காவல்துறை!

கிளிநொச்சி தர்மபுரம் காவல் பிரிவுக்குட்பட்ட கல்மடுக்குளத்தின் கீழ் உள்ள பிரதான ஆறான நெத்திலி ஆறு பகுதியில் பகுதியில் அண்மைக்காலமாக பெறுமதி மிக்க பல வகை மரங்களை சட்டவிரோதமான முறையில் வெட்டப்பட்டு வருகின்றது.

இரவு வேளைகளில் எந்தவித அனுமதியும் இன்றி மரங்கள் அழிக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டு வருவதுடன், அப்பகுதியில் உள்ள ஆற்றிலும் சட்ட விரோதமான முறையில் மணல் அகழ்வு இடம் பெற்று வருகின்றது.
அத்தோடு, நெற்செய்கை மேற்கொள்ளப்படும் வயல் நிலங்களிலும் பல அடிதாலத்திற்கு தோண்டப்பட்டு மணல் அகழ்வும் இடம் பெறுவதாக அப்பகுதியில் வாழும் விவசாயிகள் கிராம அலுவலருக்கு முறைப்பாட்டு செய்துள்ளனர்.

Advertisement

இந்தநிலையில் நேற்றையதினம் (22) தருமபுரம் காவல் நிலைய பொறுப்பதிகாரி எம் திஸ்ஸாநாயக்க, கிராம அலுவலர், கிராம மட்ட அமைப்புக்கள் மற்றும் கண்டாவளை பிரதேச செயலாக அபிவிருத்தி உத்தியோகத்தர் உள்ளிட்டோர் இணைந்து அப்பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாக நேரில் சென்று பார்வையிட்டனர்.

இதுபோன்ற செயற்பாடுகள் இனிவரும் காலங்களில் இடம்பெறாது இருப்பதற்கு 0718592122 எனும் தனது பிரத்தியோக தொலைபேசி இலக்கத்தின் ஊடாக எந்த வேளையிலும் தம்மை தொடர்பு கொண்டு முறையிடுமாறு தர்மபுரம் காவல் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
எந்தவித குற்றச்செயல்கள் இடம்பெற்றாலும் உடன் தெரிவிப்பதன் மூலம் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த முடியும் எனவும், இரவு வேளைகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தெரிவித்தார்.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version