இலங்கை

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை நோக்கி ; யாழில் ஆரம்பமான போராட்டம்!

Published

on

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை நோக்கி ; யாழில் ஆரம்பமான போராட்டம்!

முப்பது ஆண்டுகளாக சிறையில் ஏக்கத்துடன் இருக்கின்ற தமிழ் உறவுகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணம் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் போராட்டமும் கண்காட்சியும் இடம்பெற்று வருகின்றது.

குரலற்றவர்களின் குரல் அமைப்பால் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில் சிறைக் கூடங்களை காட்சிப்படுத்தியதுடன் ஆவணப்படம் ஒன்றும் வெளியிடப்பட்டது.

Advertisement

இந்நிலையில் சிறைகளில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளின் நினைவாக நாளை அஞ்சலி நிகழ்வு ஆரம்பமாக உள்ளது.

வருகின்ற மக்கள், மாணவர்கள் கண்காட்சி கூடத்தை இரண்டு நாளும் பார்வையிட முடியும். இன்று மாலை 4:30 இலிருந்து ஆற்றுகை அரங்க நிகழ்வுகளும் இடம்பெற இருக்கிறது.

தொடர்ந்து விடுதலை விருட்சம் செயற்பாடு மூன்று மாதங்களுக்கு இடம்பெறும்.

Advertisement

வடக்கு கிழக்கில் உள்ள எட்டு மாவட்டத்திலும் ஒரு விருட்சம் நடப்படவுள்ளது.

அதற்கான விடுதலை நீர் உலகம் முழுவதும் சேகரிக்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version