இலங்கை

நல்லூர் பிரதேச சபையின் சி.சி.ரிவி கண்காணிப்பு!

Published

on

நல்லூர் பிரதேச சபையின் சி.சி.ரிவி கண்காணிப்பு!

நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் கழிவுகளை வீசும் செயற்பாடுகளை கண்காணிப்பதற்காக நல்லூர் பிரதேச சபையால் கண்காணிப்பு கேமராக்கள் (cctv) நிறுவப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழலையும் பொதுச் சுகாதாரத்தையும் பேணுவதற்காக சுகாதார விதிமுறைகளை மீறி பொது இடங்களில் கழிவுகளை வீசுபவர்களை கண்காணிக்கவே அவை பொருத்தப்பட்டுள்ளன.

Advertisement

இந்நிலையில் கமரா பதிவுகளின் ஆதாரங்களின் பிரகாரம் கழிவுகளை வீசுபவர்களுக்கு எதிராக பிரதேச சபை சட்டத்தின் பிரகாரம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பத்மநாதன் மயூரன் அறிவித்துள்ளார்.

இதேவேளை, முன்னதாக யாழ். நல்லூர் பிரதேச சபையின் குப்பை சேமிப்பு மையத்தில் குவிக்கப்பட்டுள்ள குப்பைகள் மற்றும் அவை எரியூட்டப்படுகின்றதால் ஏற்படும் புகையால் அப்பகுதி மக்கள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக செய்திகள் வெளியாகியிருந்தது.

இதனால் சுற்றுவட்டார மக்கள் கடும் அதிருப்தியுடனும், சுகாதார அச்சத்துடனும் வாழ்ந்து வந்தனர். 

Advertisement

இவ்வாறான பின்னணியில் தற்போது நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் கழிவுகளை வீசும் செயற்பாடுகளை கண்காணிப்பதற்காக நல்லூர் பிரதேச சபையால் கண்காணிப்பு கமராக்கள் நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version