இலங்கை

நிதி மோசடி ; பொதுமக்களின் உதவியை நாடிய பொலிஸார்

Published

on

நிதி மோசடி ; பொதுமக்களின் உதவியை நாடிய பொலிஸார்

ஒன்லைன் மோசடி விசாரணையில் ஈடுபட்டுள்ள ஒரு சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

கடுவெல, 270/6 ஹல போமிரியவைச் சேர்ந்த லியனதுகோரலலாகே டான் நிரோஷன் சமீரா (NIC: 780232196V) என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர்,

Advertisement

பரிசுப் பொருட்கள் வழங்குவதாக பொய்யான வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றியதாகவும், வங்கி வைப்புத்தொகை மூலம் நிதியை மோசடி செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும் குறித்த சந்தேக நபர் சந்தேகத்திற்கிடமான வங்கிக் கணக்குகளைப் பராமரித்து வருவதாகக் பொலிசார் தெரிவித்தனர்.

இச்சம்சவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிதிப் புலனாய்வுப் பிரிவு விசாரணையை ஆரம்பித்துள்ளது

Advertisement

குறித்த வழக்கு தற்போது கொழும்பு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

சந்தேக நபரின் படத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர்

மேலும் தகவல் தெரிந்தவர்கள் 071-8594911 அல்லது 011-2320140 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version