இலங்கை

நீதிமன்றிலிருந்து தப்பிச் ஓடிய சிறைக்கைதி கைது ; விசாரணைகளை தீவிரப்படுத்தும் CID

Published

on

நீதிமன்றிலிருந்து தப்பிச் ஓடிய சிறைக்கைதி கைது ; விசாரணைகளை தீவிரப்படுத்தும் CID

வெலிசர நீதவான் நீதிமன்றத்திலிருந்து தப்பிச் சென்ற சிறைக்கைதி ஒருவர் மஹபாகே பிரதேசத்தில் வைத்து மேல்மாகாணத்தின் வடக்கு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று  (23) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேல்மாகாணத்தின் வடக்கு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சிறைக்கைதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Advertisement

கைதுசெய்யப்பட்டவர் கெட்டஹெத்த பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடையவர் ஆவார்.

கைதுசெய்யப்பட்ட சிறைக்கைதி கடந்த பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி வழக்கு விசாரணைக்காக மஹர சிறைச்சாலையிலிருந்து வெலிசர நீதவான் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பை மீறி நீதிமன்றத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தப்பிச் சென்ற சிறைக்கைதி ராகமை, கந்தானை, மினுவாங்கொடை, ஜா எல ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது.

Advertisement

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல்மாகாணத்தின் வடக்கு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version