பொழுதுபோக்கு

பிறவி நடிகை, இன்னொரு மனோரமா; எனக்கு அவருடன் அதிக காம்பினேஷன் இல்ல: கோவை சரளா பற்றி வடிவேலு ஓபன் டாக்!

Published

on

பிறவி நடிகை, இன்னொரு மனோரமா; எனக்கு அவருடன் அதிக காம்பினேஷன் இல்ல: கோவை சரளா பற்றி வடிவேலு ஓபன் டாக்!

கோவை சரளாவை பிறவி நடிகை என்று நடிகர் வடிவேலு புகழாரம் சூட்டியுள்ளார். சினிமா விகடன் யூடியூப் சேனல் உடனான ஒரு நேர்காணலின் போது பல்வேறு தகவல்களை அவர் பதிவு செய்துள்ளார்.சுதீஷ் சங்கர் இயக்கத்தில், ஃபஹத் ஃபாசில், வடிவேலு, கோவை சரளா ஆகியோரின் நடிப்பில் உருவாகி இருக்கும் மாரீசன் திரைப்படம், ஜூலை 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் புரோமோஷன் பணிகளுக்காக நடிகர் வடிவேலு, பல்வேறு நேர்காணல்களில் பங்கேற்று வருகிறார். அந்த வகையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் நடிகை கோவை சரளாவின் நடிப்பு திறமையை அவர் வெகுவாக பாராட்டினார். குறிப்பாக, கோவை சரளாவை பிறவிக் கலைஞர் என்று நடிகர் வடிவேலு குறிப்பிட்டுள்ளார்.அதன்படி, “மாரீசன் திரைப்படம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருக்கும். இப்படத்தில் நடித்த கலைஞர்கள் அனைவரும் கதையோடு ஒன்றிணைந்து விட்டனர். ஃபகத் ஃபாசிலின் நடிப்பு இந்தப் படத்தை மேலும் மெருகேற்றி விட்டது. இப்படத்தின் ட்ரெய்லர் பார்த்து ரசிகர்களே ஒவ்வொரு விதமான கதையை கூறுகின்றனர். நிச்சயம் ரசிகர்களின் பாராட்டை இந்தப் படம் பெறும்.இப்படத்தில் நடிகை கோவை சரளாவின் கதாபாத்திரம் வித்தியாசமானதாக இருக்கும். மிகச் சிறப்பான பங்களிப்பை இந்த படத்திற்காக அவர் வழங்கியுள்ளார். கோவை சரளாவை பிறவி நடிகை என்று கூறலாம். எந்த மாதிரியான கதாபாத்திரத்தை கொடுத்தாலும், அவருடைய நடிப்பு அசத்தலாக இருக்கும். தமிழ் சினிமாவிற்கு கிடைத்த இன்னொரு மனோரமாவாக கோவை சரளாவை நான் பார்க்கிறேன்.இதற்கு முன்னர் நாங்கள் நடித்த படங்களை போன்று, இதில் அதிக காட்சிகளில் இணைந்து நடிக்கவில்லை. இப்படத்தில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் கோவை சரளா நடித்திருக்கிறார். ரசிகர்களுக்கு இது நிச்சயம் புதிதாக இருக்கும்” என்று நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார். இதற்கு முன்பாக வடிவேலு – கோவை சரளா கூட்டணியில் அமைந்த காமெடி காட்சிகள், இன்றும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன. குறிப்பாக, ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’, ‘விரலுக்கேத்த வீக்கம்’ போன்ற படங்களில் கணவன் – மனைவியாக நடித்து காமெடியில் இருவரும் அசத்தி இருப்பார்கள். அதற்கு மாற்றாக, ‘மாரீசன்’ திரைப்படத்தில் இருவரும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால், ரசிகர்களிடையே இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version