சினிமா

மீண்டும் சந்திப்போம்.. எப்போது என்பது தெரியாது! பாக்கியலட்சுமி கடைசி நாள் ஷூட்டிங் போட்டோ!

Published

on

மீண்டும் சந்திப்போம்.. எப்போது என்பது தெரியாது! பாக்கியலட்சுமி கடைசி நாள் ஷூட்டிங் போட்டோ!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குடும்ப மெலோடிராமா சீரியல்களில் முக்கிய இடத்தை பிடித்த ‘பாக்கியலட்சுமி’ இப்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. குடும்பத்தின் மேன்மை, பெண்களின் தன்னம்பிக்கை, தாயின் தியாகம் மற்றும் உறவின் உண்மை முகம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட இந்த தொடரானது, இல்லத் தரசிகளின் வாழ்க்கையில் ஒரு பகுதியாகவே மாறியது.இதற்கிடையில் சமீபத்தில் வெளியான தகவலின்படி, இந்த வாரத்துடன் பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வருகிறது. இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில், ‘கோபி’ கதாபாத்திரத்தில் நடித்த சதீஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடைசி நாள் ஷூட்டிங் புகைப்படத்தையும், அதனுடன் ஒரு உணர்ச்சிபூர்வமான பதிவையும் பகிர்ந்துள்ளார்.சதீஷ் அந்த புகைப்படத்துடன், “பாக்கியலட்சுமி சீரியலின் இறுதி நாள் ஷூட்டிங் இன்று. எப்போதும் போல் இன்றும் இறைவனை வணங்கி ஷூட்டிங்கை தொடங்கினோம். மீண்டும் சந்திப்போம்… எப்போது என்பது தெரியாது…” என்ற  பதிவையும் வெளியிட்டுள்ளார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version