இலங்கை

ரஷ்யாவில் விமான விபத்து ; பயணிகள் அனைவரும் பலி

Published

on

ரஷ்யாவில் விமான விபத்து ; பயணிகள் அனைவரும் பலி

ரஷ்யாவின் கபரோவ்ஸ்கிலிருந்து டைண்டா சென்ற An -24 வானூர்தி ஒன்று வீழ்ந்து நொறுங்கியுள்ளது.

இதன்போது, வானூர்தியில் பயணித்த எவரும் உயிர் தப்பியிருக்க வாய்ப்பில்லை என்று ரஷ்ய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

Advertisement

ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அமூர் மாகாணம் அருகே திண்டா நகரத்தை நோக்கிச் ஒரு பயணிகள் விமானம் சென்றுகொண்டிருந்தது.இந்த விமானத்தில் 5 குழந்தைகள் உட்பட மொத்தம் 49 பேர் பயணம் செய்துகொண்டிருந்தனர்.

இந்நிலையில், இந்த விமானம் திண்டா விமான நிலையத்தை நெருங்கும் வேளையில், விமானக் கட்டுப்பாட்டு நிலையத்துடன் தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது.

மேலும் திடீரென ரேடாரிலிருந்து அந்த விமானம் காணாமல்போனதால் விமான நிலைய ஊழியர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் குழப்பத்தில் இருந்தனர்.

Advertisement

இதையடுத்து, இந்த சம்பவம் உறுதியானதும், ரஷ்யாவின் அவசரநிலை சேவைத் துறை மற்றும் விமானப் பாதுகாப்புத் துறைகள் இணைந்து தீவிர தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.

மேலும், Mi-8 ரக ஹெலிகாப்டர் காணாமல் போன விமானத்தை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version