சினிமா

90களின் ரொமான்டிக் ஹீரோ அப்பாஸ்…! தமிழ் சினிமாவுக்கு ரீஎன்ட்ரி..!வெளியான தகவல் இதோ…!

Published

on

90களின் ரொமான்டிக் ஹீரோ அப்பாஸ்…! தமிழ் சினிமாவுக்கு ரீஎன்ட்ரி..!வெளியான தகவல் இதோ…!

90களில் தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் மற்றும் இளம் பெண்களின் கனவு நாயகனாக கலக்கிய நடிகர் அப்பாஸ், 10 ஆண்டுகளுக்குப் பிறகு திரை உலகிற்கு மீண்டும் வருகிறார். ‘காதல் தேசம்’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான அப்பாஸ், ‘விஐபி’, ‘படையப்பா’, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, ‘பம்மல் கே. சம்பந்தம்’, ‘காதல் வைரஸ்’ போன்ற வெற்றிப் படங்களில் துணை நடிகராகவும், முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர்.தற்போது, ஜி.வி. பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் புதிய திரைப்படத்தில், அப்பாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கும் இந்த படத்தில், கௌரி பிரியா நாயகியாக நடிக்க, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். “அப்பாஸ் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதை இப்போது கூற முடியாது. ஆனால் இது அவருக்கான சரியான கம்பேக்” என்கிறார் இயக்குநர்.மேலும், நெட்ப்ளிக்ஸ் வெப் தொடரிலும் அப்பாஸ் நடிக்கவுள்ளதாக தகவல் வந்துள்ளதுடன், அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. 90களின் இளமையான ஹீரோ திரும்பி வருவது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது!

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version