சினிமா

கறுப்பு-வெள்ளை சுடிதாரில் இன்ஸ்டாவை கலக்கும் பாவனி…!வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்…!

Published

on

கறுப்பு-வெள்ளை சுடிதாரில் இன்ஸ்டாவை கலக்கும் பாவனி…!வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்…!

பிரபல தமிழ் சீரியல் நடிகையும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளருமான பாவனி, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மிகுந்த புகழைப் பெற்றவர். நிகழ்ச்சியில் தனது நேர்மையான பேச்சு மற்றும் உணர்வுபூர்வமான நடத்தை மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.பாவனி, பிக்பாஸ் சீசன் முடிவடைந்த பிறகு நடிகரும் ,நடன இயக்குநருமான அமீரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களின் காதலுக்கும், திருமணத்திற்கு பின்னர் நடந்த நிகழ்வுகளுக்கும் சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பு கிடைத்தது. சீரியல் ரசிகர்கள் மட்டுமல்லாமல், பிக்பாஸ் ரசிகர்களிடமும் இவர்களின் ஜோடி மிகவும் பிரபலமானது.தற்போது பாவனி, திருமணத்திற்குப் பின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. கறுப்பு மற்றும் வெள்ளை நிறத்தில்  அழகான சுடிதார் அணிந்து அழகாக போஸ் கொடுத்திருக்கும் பாவனி, எளிமையிலும் மிகுந்த  லுக் ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார்.இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. ஏற்கனவே ஆயிரக்கணக்கான லைக்குகள் மற்றும் கமெண்ட்கள் குவிந்து வருகின்றன. பாவனியின் இந்த ஸ்டைலிஷ் அவதாரமும், அவரின் தரமான ஃபேஷன் சென்ஸும் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version