இந்தியா

தமிழீழ விடுதலைக்கான ஆதரவு என்றும் தொடரும்!

Published

on

தமிழீழ விடுதலைக்கான ஆதரவு என்றும் தொடரும்!

தமிழ் மக்களின் விடிவுக்காக நான் ஒருபோதும் அடிபணியவோ அல்லது சமரசம் செய்யவோ மாட்டேன். தமிழீழ விடுதலைக்காக எனது வாள்கள் உயரும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத் தலைவர் வைகோ உரையாற்றியுள்ளார்.

இந்திய மாநிலங்கள் அவைக்கான தனது பதவிக்காலத்தை வைகோ நேற்று நிறைவு செய்துள்ளார். இதை முன்னிட்டு, அவையில் பிரயாவிடை உரையாற்றும்போதே, ஈழத்தமிழர்கள் தொடர்பில் கனதியான கருத்துக்களைப் பதிவுசெய்துள்ளார்.

Advertisement

“ஈழத்தமிழர்களின் துயரத்தையும், சிங்கள அரசாங்கத்தால் அவர்களுக்கு எதிராகக் கட்ட விழ்த்து விடப்பட்ட படுகொலைகள் தொடர்பிலும் மாநிலங்கள் அவையில் 13 தடவைகள் கண்டனத் தீர்மானம் கொண்டுவந்து உரையாற்றியுள்ளேன். இதன் விளைவாக நான் கடும் பழிவாங்கல்களுக்கும் உள்ளானேன். எனினும், ஈழ மக்களுக்கான எனது குரல் தொடர்ந்து ஒலிக்கும்” என்றும் வைகோ மேலும் கூறியுள்ளார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version