பொழுதுபோக்கு

திரைப்படமாகும் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு… இயக்குநர் யார் தெரியுமா?

Published

on

திரைப்படமாகும் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு… இயக்குநர் யார் தெரியுமா?

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு, ‘அய்யா’ என்ற தலைப்பில் திரைப்படமாகிறது. இந்தப் படத்தை தேசிய விருது பெற்ற இயக்குநர் சேரன் இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. “இன விடுதலைக்கான போராட்டத்தின் வரலாறு” என்ற கருப்பொருளுடன் இந்தப் திரைப்படம் உருவாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.ராமதாஸின் பிறந்தநாளான இன்று அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக்கப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.மேலும், இந்தப் படத்தில் ராமதாஸ் கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமார் நடிக்கவுள்ளதாகவும் சேரன்  இயக்கவிருப்பதாகவும், லைகா நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  மருத்துவர் ராமதாஸ், சமூக நீதி மற்றும் வன்னியர் சமூகத்தின் மேம்பாட்டிற்காக போராடியவர். அவரின் அரசியல் பயணம், சமூக சீர்திருத்த நடவடிக்கைகள், மற்றும் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டு நடத்திய தொடர் போராட்டங்கள் எனப் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை இந்தப் படம் சித்தரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தின் நடிகர்கள் மற்றும் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை. ஆரம்பகாலத்தில் ராமதாஸ் மருத்துவப் படிப்பை முடித்த பிறகு, ஒரு மருத்துவராகப் பணியாற்றினார். பின்னர், 1980களில் வன்னியர் சங்கம் என்ற அமைப்பைத் தொடங்கி, சமூக நீதிக்காக குரல் கொடுத்தார். 1989 ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சியைத் தொடங்கி, தமிழக அரசியலில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். அவரது தலைமையின் கீழ், பா.ம.க. பல தேர்தல்களில் போட்டியிட்டு, குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெற்றுள்ளது. மருத்துவர் ராமதாஸ், இட ஒதுக்கீடு, கல்வி, விவசாயம் போன்ற பல்வேறு சமூகப் பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து பேசி வருகிறார்.பாமக நிறுவனர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படவுள்ளதாக வெளியான செய்திகளால், அவரது தொண்டர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தத் திரைப்படம் ராமதாஸின் சமூகப் பணிகள், இட ஒதுக்கீடு போராட்டங்கள் மற்றும் அவரது அரசியல் பயணம் போன்றவற்றை உள்ளடக்கியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் குறித்த மற்ற அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version