பொழுதுபோக்கு

பாட்டு எழுதவே பாலிட்டிக்ஸ்; வேலாயுதம் படத்தில் விஜய் பார்த்த வேலை: கவிஞர் பிரியன் நெகிழ்ச்சி!

Published

on

பாட்டு எழுதவே பாலிட்டிக்ஸ்; வேலாயுதம் படத்தில் விஜய் பார்த்த வேலை: கவிஞர் பிரியன் நெகிழ்ச்சி!

சினிமா உலகில் நிகழும் பாலிட்டிக்ஸ் குறித்து ‘வேலாயுதம்’ திரைப்படத்தின் போது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை பாடலாசிரியர் பிரியன் கூறியுள்ளார். வாவ் தமிழா யூடியூப் சேனலுடனான நேர்காணலின் போது இதனை அவர் தெரிவித்துள்ளார்.ஒரு நபர் எந்த துறையில் பணியாற்றினாலும் அதில் நிறைய அரசியல் மற்றும் தடைகளை கடந்து தான் பணியாற்ற முடியும். சாதாரண அலுவலகம் முதல் உயரிய பதவி வரை அனைத்திலும் இது போன்ற சிக்கல்கள் காணப்படும். இதற்கு சினிமா துறையும் விதிவிலக்கு கிடையாது. அதிகப்படியான பணம் மற்றும் புகழ் கிடைக்கும் என்பதால், சினிமாவில் ஏராளமான பாலிட்டிக்ஸ் இருக்கும் என்பது நிதர்சனம். இதனை திரைத்துறையைச் சேர்ந்த பலர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அது போன்ற ஒரு சம்பவத்தை பாடலாசிரியர் பிரியனும் குறிப்பிட்டுள்ளார்.’ஆட்டம்’ என்ற திரைப்படத்தின் மூலம் கடந்த 2005-ஆம் ஆண்டு சினிமாவில் பாடலாசரியராக பிரியன் அறிமுகமானார். இது தவிர ‘அஞ்சாதே’ திரைப்படத்தில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நாயகனாக அறிமுகமான ‘நான்’ திரைப்படத்தில் இவர் எழுதிய ‘மக்காயாலா மக்காயாலா’ பாடல் வைரல் ஹிட்டானது. இதேபோல், விஜய் நடிப்பில் வெளியான ‘வேலாயுதம்’ திரைப்படத்தில் இவரது ‘வேலா வேலா வேலாயுதம்’ பாடலும் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், இந்தப் பாடலின் போது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும், அதற்கு உறுதுணையாக விஜய் எவ்வாறு செயல்பட்டார் என்பதையும் பாடலாசிரியர் பிரியன் தெரிவித்துள்ளார். அதன்படி, “திரைத் துறையில் பாடல் எழுதுவதிலேயே நிறைய பாலிட்டிக்ஸ் செய்கின்றனர். விஜய் நடித்த ‘வேலாயுதம்’ திரைப்படத்திற்கு நான் பாடல் எழுதினேன். அதில் விஜய்யின் அறிமுக பாடலாக, நான் எழுதியது தான் இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால், அதற்கு பதிலாக வேறு பாடலை டைட்டில் சாங்காக வைத்தனர்.நான் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், இதனை அறிந்து நடிகர் விஜய் கோபம் கொண்டார். நான் எழுதிய பாடல் தான் டைட்டில் சாங்காக இடம்பெற்றிருக்க வேண்டும் என்று விஜய் என்னிடம் கூறினார். எனினும், இந்தப் பாடலை படம் முழுவதும் வைப்பதாக கூறிய விஜய், குறைந்தது 30 இடங்களிலாவது இந்தப் பாடலை இடம்பெறச் செய்தார்” என பாடலாசிரியர் பிரியன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version