இலங்கை

முன்னாள் அமைச்சர் சம்பிக்கவின் பயத்தடை தற்காலிகமாக நீக்கம்!

Published

on

முன்னாள் அமைச்சர் சம்பிக்கவின் பயத்தடை தற்காலிகமாக நீக்கம்!

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தொடர்பான வழக்கை எதிர்வரும் நவம்பர் 18 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் அதுவரையில் அவருக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை தற்காலிகமாக நீக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு இராஜகிரிய பகுதியில் வாகன விபத்தை ஏற்படுத்தியதுடன் சம்பவத்தின் பின்னர் ஆதாரங்களை மறைத்தமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க

Advertisement

ரணவக்க அவரது சாரதி மற்றும் அப்போதைய வெலிக்கடை பொலிஸ் பொறுப்பதிகாரி சுதத் அஸ்மடல ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் நவம்பர் 18 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (25) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதேவேளை, பிரதிவாதி பாட்டலி சம்பிக்க ரணவக்க சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜெயமன்னே, அடுத்த நீதிமன்ற திகதி வரை தனது கட்சிக்காரருக்கு விதிக்கப்பட்டுள்ள பயணத் தடையை தற்காலிகமாக நீக்க உத்தரவு பிறப்பிக்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

Advertisement

அதன்படி, குற்றம் சாட்டப்பட்ட பிரதிவாதிக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை தற்காலிகமாக தளர்த்த உத்தரவிட்டதுடன் இது குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்க வேண்டும் என்றும் மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version