இலங்கை

வீதியை விட்டு விலகி சுமார் 300 அடி பள்ளத்தில் விழுந்த கார்!

Published

on

வீதியை விட்டு விலகி சுமார் 300 அடி பள்ளத்தில் விழுந்த கார்!

பதுளையில் இருந்து ஒக்கம்பிட்டி பகுதிக்கு தான நிகழ்வொன்றிற்கு சென்று மீண்டும் பதுளைக்கு திரும்பும் போது பசறை எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாக வீதியை விட்டு விலகி சுமார் 300 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 குறித்த கார் விபத்துக்குள்ளாகும் போது காரில் ஐவர் பயணித்ததாகவும் அதில் மூவர் பலத்த காயமடைந்த நிலையில் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன்
பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement

 குறித்த சம்பவம் நேற்றிரவு 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.
மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version