இலங்கை

17 வருடங்களாக தந்தைக்காக காத்திருக்கும் ஒரு மகளின் கண்ணீர்க் குரல்; இரக்கம் காட்டுவாரா ஜனாதிபதி அனுர?

Published

on

17 வருடங்களாக தந்தைக்காக காத்திருக்கும் ஒரு மகளின் கண்ணீர்க் குரல்; இரக்கம் காட்டுவாரா ஜனாதிபதி அனுர?

   தனது தந்தையின் வருகைக்காக 17 வருடங்களாகக் காத்துக்கொண்டிருக்கும் ஒரு மகளின் கண்ணீர்க் குரல் ஜனாதிபதி அனுரகுமார அரசாங்கத்தின் காதுகளிள் விழாதா என தனது பிஞ்சு காலங்களில் தந்தை சிறையில் இருந்த தாயை காலன் கொண்டு சென்ற நிலையில் மகளின் கண்ணீர்க் குரல் கேட்பவர் நெஞ்சங்களை உருக வைத்துள்ளது.

2008 ஆம் ஆண்டு கிளிநொச்சி மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தந்தையான சச்சிதானந்தம் – ஆனந்த சுதாகர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்டார்.

Advertisement

ஒன்பது நீண்ட வருடங்கள் கழித்து, அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, கடந்த 17 வருடங்களாக கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.

2018 ஆம் ஆண்டு ஆனந்த சுதாகரின் 36 வயதான மனைவி யோகராணி, உயிரிழந்தார். தனது மனைவியின் இறுதிச் சடங்கிற்காக ஆனந்த சுதாகர் சிறைச்சாலையிலிருந்து அழைத்து வரப்பட்டபோது நடந்த ஒரு சம்பவம், பார்த்தவர்களின் மனதை உலுக்கியது.

தனது தந்தையுடன் தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற ஏக்கத்துடன், அவரது மகள் சங்கீதா, சிறைச்சாலை பேருந்திலேயே ஏறிச் செல்ல முயற்சி செய்த காட்சி, அங்கிருந்த அனைவரையும் கண்ணீரில் ஆழ்த்தியது.

Advertisement

தாய் இல்லாத நிலையில், தந்தையின் அரவணைப்பிற்காக ஏங்கித் தவிக்கும் சங்கீதா, இந்த அரசாங்கமாவது தனது தந்தையை விடுதலை செய்ய வேண்டும் என்று உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version