இலங்கை
அதிகாலையில் பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த இளம்பெண்ணின் பொம்மை
அதிகாலையில் பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த இளம்பெண்ணின் பொம்மை
சீதுவ பொலிஸ் பிரிவின் ராஜபக்ஷபுர பகுதியில் இன்று (26) அதிகாலை 29 வயதுடைய யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்,
ராஜபக்ஷபுர பகுதியில் இன்று (26) அதிகாலை விசேட தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் விடுதிகள் ஆய்வு செய்யப்பட்டன.
அந்த நேரத்தில், ஒரு விடுதி அறையில் இருந்த ஒரு பெண், ஒரு பொம்மையை எடுத்துக்கொண்டு அறையை விட்டு வெளியேறியபோது, பொலிஸ் அதிகாரிகளால் சந்தேகிக்கப்பட்டார்.
அந்த சந்தேகத்தின் அடிப்படையில், அந்தப் பெண்ணின் வசம் இருந்த பொம்மையை ஆய்வு செய்தபோது, பொம்மைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் ஐஸ் மற்றும் கேரள கஞ்சாவை கண்டுபிடிக்க முடிந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் போதைப்பொருள் சோதனைக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் உள்ளே மறைத்து வைக்கப்பட்டிருப்பதை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவ யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சிறப்பு நடவடிக்கையின் போது, 19 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.