இலங்கை

எம்.பி.யாக பதவியேற்ற கமல்ஹாசனுக்கு மகள் ஸ்ருதிஹாசன் வாழ்த்து!

Published

on

எம்.பி.யாக பதவியேற்ற கமல்ஹாசனுக்கு மகள் ஸ்ருதிஹாசன் வாழ்த்து!

  உலகநாயகனும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான நடிகர் கமல்ஹாசன் ராஜ்யசபா எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்ட நிலையில், திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஒடிசாவின் முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

Advertisement

இந் நிலையில், கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் நெகிழ்ச்சியான வாழ்த்து பதிவை வெளியிட்டுள்ளார்.    தனது தந்தையுடன் தான் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து,

துணிச்சலான புதிய உலகத்தை நோக்கிய உங்களின் பயணத்தை இன்றைய நாள் குறிக்கிறது.

இன்று ராஜ்ய சபாவில் வலிமையுடனும், உற்சாகத்துடனும் அவையில் எதிரொலிக்கும் வகையில் உங்களுக்கே உரிய குரலில் நீங்கள் சத்தியப்பிரமாணம் செய்ததைப் பார்த்தது என்றென்றும் என் மனதில் பதிந்த ஒரு தருணம்.

Advertisement

எப்போதும் போல, நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கவும், நீங்கள் அடைய விரும்பும் அனைத்தையும் அடையவும் நான் விரும்புகிறேன் என ஸ்ருதிஹாசன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version