பொழுதுபோக்கு
கார்த்தி அழுதா நான் ரசிப்பேன்; ஆனா அவனே என்னை அழ வச்சிட்டான்: சூர்யா ஞாபகங்கள்!
கார்த்தி அழுதா நான் ரசிப்பேன்; ஆனா அவனே என்னை அழ வச்சிட்டான்: சூர்யா ஞாபகங்கள்!
நடிகர் சிவக்குமாரின் மகன்களான சூர்யா மற்றும் கார்த்தியின் குழந்தைப்பருவ ஞாபகங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருவார்கள். இந்நிலையில் தனக்கு கார்த்திக் தம்பி நான் அவருக்கு அண்ணன் என்ற பொறுப்பு வந்தது குறித்து நடிகர் சூர்யா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். சூர்யா தனது குழந்தைப்பருவத்தில் கார்த்தியை கேலி செய்வதும், பயமுறுத்துவதும், அவரது கண்ணீரைக் கண்டு மகிழ்வதும் உண்டு என்பதை ஒப்புக்கொண்டார். ஒரு சமயம், ஒரு பொறுப்பான அண்ணனாக தான் நடந்து கொள்ளவில்லை என வருந்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.ஒருமுறை கார்த்தி தனது சைக்கிளில் ஒரு கடை மீது மோதியபோது, மற்றொரு நண்பன் கார்த்திக்கு ஆதரவாக “அவன் கார்த்தியின் அண்ணன்” என்று கூறிய சம்பவம், சூர்யாவிற்கு தான் ஒரு மூத்த சகோதரன் என்ற பொறுப்பை உணர்த்தியதாகக் கூறினார். அப்போதுதான் சூர்யாவுக்கு தான் அந்த இடத்தில் என் சகோதரனுக்காக நின்றிருக்க வேண்டும் ஆனால் தன்னால் அந்த இடத்தை பூர்த்தி செய்ய முடியவில்லை என்று கூறி வருத்தப்பட்டு பேசியுள்ளார். இந்நிலையில் வளர்ந்ததும் கார்த்தி இரண்டு வருடங்கள் அமெரிக்கா சென்றிருந்தபோது, அவர் தனியாக சமைப்பதையும், துணி துவைப்பதையும், உடல்நிலை சரியில்லாதபோது தனக்குத் தானே மருந்து எடுத்துக்கொள்வதையும் அம்மாவிடம் கூறியிருப்பதை சூர்யா அறிந்துகொண்டார். இத்தனை வருடங்களாக கார்த்திக்காக தான் எதுவும் செய்யாமல், அவனைத் தள்ளி வைத்திருந்ததற்காக சூர்யாவை வருத்தப்பட வைத்ததாகவும் கூறினார்.பின்னர், கார்த்தியிடமிருந்து ஒரு நெகிழ்ச்சியான மின்னஞ்சல் வந்ததாக சூர்யா தெரிவித்தார். அந்த மின்னஞ்சலில், தன்னை ஒரு நண்பனாகவும், சகோதரனாகவும் ஏற்றுக்கொள்ளுமாறு கார்த்தி சூர்யாவிடம் கேட்டுக்கொண்டான். தான் உடை உடுத்துவது உட்பட எல்லாவற்றிற்கும் சூர்யாவை ஒரு முன்மாதிரியாகப் பார்ப்பதாகவும் கார்த்தி குறிப்பிட்டிருந்தான். இந்த மின்னஞ்சல் சூர்யாவை மிகவும் பாதித்ததோடு, அவர்களின் உறவை முற்றிலும் மாற்றியமைத்தது. அதுவரை கார்த்திக்கை அழ வைத்த சூர்யா முதன்முதலில் அப்போது கண்கலங்கி வருத்தப்பட்டதாக கூறினார்.Happy Brothers Day!🫂❤️ #Suriya #Karthi #HappyBrothersDay