இலங்கை
கிளிநொச்சி மாவட்ட செயலக நிதியியல் செயற்பாட்டு முகாமைத்துவ குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது!
கிளிநொச்சி மாவட்ட செயலக நிதியியல் செயற்பாட்டு முகாமைத்துவ குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது!
குறித்த கலந்துரையாடல், கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் தலைமையில், மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்ட செயலக கணக்குக் கிளையினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில், மாவட்ட செயலக பிரதம கணக்காளர் க.சி கஜேந்திரன் அவர்கள் தற்போதைய நிதி விடயம் சம்பந்தமாக விளக்கமளித்தார்.
தொடர்ந்து, மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களுடன் இணைந்த திணைக்களங்களினது நிதி செலவீன தலைப்புக்களின் கீழ் கிடைக்கப்பெற்ற ஒதுக்கீடுகள் அவற்றின் நிதி செயற்பாட்டு தற்போதைய நிலைமைகள் விரிவாக ஆராயப்பட்டன.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர்(காணி), கணக்காளர்,பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், மாவட்ட பொறியியலாளர்,மாவட்ட உதவித்திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள்,உதவி பிரதேச செயலாளர்கள், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள் மற்றும் கணக்காளர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள்,
திணைக்களங்களின் உதவிப் பணிப்பாளர்கள், மாவட்ட இணைப்பாளர்கள், விடயத்திற்கு பொறுப்பான உத்தியோகத்தர்கள், கணக்குக் கிளை உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை