சினிமா
“கூலி” படத்தில் ஸ்ருதியின் காரெக்டர் இதுதானா.? வெளியான சுவாரஸ்யமான தகவல்கள்…
“கூலி” படத்தில் ஸ்ருதியின் காரெக்டர் இதுதானா.? வெளியான சுவாரஸ்யமான தகவல்கள்…
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் ‘கூலி’. இத்திரைப்படம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இது ஒரு கமர்ஷியல் ஆக்ஷன் பிலிம் என்றபோதிலும், இதில் இடம்பெறும் நட்சத்திர பட்டாளம், கதையின் பலத்த பாத்திரங்கள் என அனைத்தும் இணையத்தில் வரவேற்பை பெற்றுள்ளன.லோகேஷ் கனகராஜின் கற்பனையிலேயே உருவான ‘கூலி’ படம், சூப்பர்ஸ்டார் ரஜினியின், சக்திவாய்ந்த கதாபாத்திரமாகவும், ஆழமான சென்டிமென்ட் கதையம்சம் கொண்டும் உருவாகியுள்ளது.இப்படத்தில் முக்கிய வேடங்களில், நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ் போன்ற பலர் நடித்துள்ளனர். இந்த படம் ஆகஸ்ட் 14, 2025 அன்று உலகம் முழுவதும் ரிலீஸாக இருக்கிறது.சமீபத்தில் நடைபெற்ற ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் ஸ்ருதி ஹாசன், ‘கூலி’ திரைப்படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து முதல் முறையாக பேசினார்.அவர் கூறியதாவது, “நான் ‘இனிமேல்’ என்ற மியூசிக் வீடியோவுக்கு ஷூட் செய்யும் போது, லோகேஷ் கனகராஜ் என்னிடம் ‘கூலி’ படத்தின் ஸ்கிரிப்டை கூறினார். மிகப் பெரிய படம், மிகப் பெரிய வாய்ப்பு என்பதற்காக மட்டுமல்ல, அந்தக் கதாபாத்திரம் என்னை தனிப்பட்ட முறையில் கவர்ந்தது.”“இப்படத்தில் சத்யராஜ் சாரின் மகளாக நடித்திருக்கிறேன். அவர் நிஜமாகவே ஒரு தந்தையாக நடந்துகொண்டார். எனக்கு அது மிகவும் உணர்வுபூர்வமான அனுபவமாக இருந்தது. இந்த கதாபாத்திரம் மிகவும் வலிமை வாய்ந்தது. இதை ஏற்க நான் ஒரு விநாடியும் யோசிக்கவே இல்ல.” என்றும் கூறியிருந்தார்.