இலங்கை
ஜனாதிபதி அநுரவின் உருவப்படத்துடன் சுற்றி திரிந்த கார் ; சோதனையில் உயிருடன் மீட்கப்பட்ட ஜீவன்
ஜனாதிபதி அநுரவின் உருவப்படத்துடன் சுற்றி திரிந்த கார் ; சோதனையில் உயிருடன் மீட்கப்பட்ட ஜீவன்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் உருவப்படத்தையும் தேசிய மக்கள் சக்தியின் சின்னத்தையும் பயன்படுத்தி காரொன்றில் இறைச்சிக்காக ஆடுகளை கொண்டு சென்ற இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெலிபென்ன பகுதி மற்றும் பதுரலிய பகுதியைச் சேர்ந்த இரண்டு நபர்கள் இதன் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்துகம பொலிஸ் சோதனைப் பிரிவின் அதிகாரிகள் சந்தேகத்திற்கிடமான முறையில் சென்று கொண்டிருந்த காரொன்றை நிறுத்தி சோதனை செய்தபோது, காருக்குள் கட்டப்பட்ட நிலையில் இறைச்சிக்காக கொண்டு செல்லப்பட்ட ஆட்டை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
பதுரலிய
மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் இறைச்சிக்காக கால்நடைகள் மற்றும் ஆடுகளை கொண்டு செல்ல குறித்த காரை நீண்ட காலமாக இரண்டு சந்தேக நபர்களும் சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் இருவரும் மத்துகம நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.