இலங்கை

தேன் எடுக்கச் சென்ற குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம் ; தமிழர் பகுதியில் சம்பவம்

Published

on

தேன் எடுக்கச் சென்ற குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம் ; தமிழர் பகுதியில் சம்பவம்

திருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் காட்டுப் பகுதியில் தேன் எடுக்கச் சென்றவர் மீது யானை தாக்கியதில் மேற்படி நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்தத் துயரச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது என்று மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

கந்தளாய் காட்டுப் பகுதிக்குத் தேன் எடுப்பதற்காக மூன்று பேர் சென்றனர் எனவும், இதன்போது யானை ஒன்று குறித்த நபர்களைத் தாக்க முற்பட்டபோது மூவரும் வெவ்வேறாகப் பிரிந்து ஓடினர் எனவும், அவ்வேளை ஒருவரை யானை தாக்கியது எனவும் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

யானையின் தாக்குதலில் ஹெல்லென – மித்தெனிய பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைவரே  குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காகத் திருகோணமலை பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்தச் சம்பவம் தொடர்பில் மொரவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version